விளையாட்டு

கிளட்ச் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் கார்ல்சன் - கடைசி இடம் பிடித்த குகேஷ்

Published On 2025-10-30 10:56 IST   |   Update On 2025-10-30 10:56:00 IST
  • இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும்.
  • முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு, ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்படும்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் 25.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

அதே சமயம் உலக செஸ் சாம்பியனான குகேஷ் இந்த செஸ் தொடரில் கடைசி இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு, ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்படும். அதே சமயம் கடைசி இடம் பிடித்த குகேஷுக்கு ரூ.62 லட்சம் பரிசாக கிடைக்கும்.

Tags:    

Similar News