ஆசிய விளையாட்டு 2023.. கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது
கம்போடியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியின் முதல் செட்டை 22 நிமிடத்தில் கைப்பற்றிய இந்திய அணி 2-வது செட்டை 19 நிமிடத்தில் கைப்பற்றியது.
கம்போடியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் இந்திய அணி 25-13 என்ற புள்ளி கணக்கில் 2-வது செட்டையும் கைப்பற்றியது.
கைப்பந்து போட்டியின் 2-வது செட்டில் 15- 10 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி 25 - 14 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.
இந்திய ஆண்கள் கைப்பந்து அணி இடம்பிடித்த வீரர்கள்:
அமித், வினித் குமார், ஷமீமுதீன் அம்மரம்பத், முத்துசாமி அப்பாவு, ஹரி பிரசாத் பெவினகுப்பே சுரேஷ், ரோஹித் குமார், மனோஜ் லக்ஷ்மிபுரம் மஞ்சுநாதா, உக்கிரபாண்டியன் மோகன், அஷ்வல் ராய், சந்தோஷ் சகாய அந்தோனி ராஜ், குரு பிரசாந்த் சுப்ரமணியன் வெங்கடசுப்பு, எரின் வர்கீஸ்.
ஆடவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நான்கு மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி சி பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் கம்போடியா, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கம்போடியாவுடன் இன்று மோதுகிறது. நாளை தென் கொரிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு (2022) நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.