ஆடவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கி... ... ஆசிய விளையாட்டு 2023.. கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது
ஆடவர்களுக்கான வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நான்கு மைதானங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி சி பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் கம்போடியா, தென் கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கம்போடியாவுடன் இன்று மோதுகிறது. நாளை தென் கொரிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.
Update: 2023-09-19 11:19 GMT