விளையாட்டு
null
LIVE

ஆசிய விளையாட்டு 2023.. கால்பந்து போட்டியில் சீனா 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது

Published On 2023-09-19 16:22 IST   |   Update On 2023-09-19 19:27:00 IST
  • ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.
  • இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஓலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.

ஆடவருக்கான வாலிபால் போட்டியில் இந்திய அணி இன்று கம்போடியா அணியை எதிர்கொள்கிறது. இதை போல கால்பந்து போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

2023-09-19 13:42 GMT

இரண்டாவது பாதியில் சீன அணி இந்திய அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்தது. இந்திய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியது. இரண்டாவது பாதியில் மட்டும் சீனா 4 கோல்களை அடித்தது. இதன் மூலம் இந்திய அணியை 0 - 5 என்ற கோல் கணக்கில் சீனா வீழ்த்தியது.


2023-09-19 13:24 GMT

சீன வீரர் TAO Qianglong 72-வது மற்றும் 75-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினார்.

2023-09-19 13:19 GMT

இரண்டாவது பாதியில் சீன வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சீனா அடுத்தடுத்து கோல்கள் அடித்து வரும் நிலையில் தற்போது 4-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

2023-09-19 12:49 GMT

இந்தியாவுக்கு எதிராக சீனா 2-வது கோலை பதிவு செய்தது. 51-வது நிமிடத்தில் சீன அணியை சேர்ந்த டாய் வெய்ஜுன் 1 கோலை அடித்தார்.

2023-09-19 12:45 GMT

கால்பந்து போட்டியின் முதல் பாதியின் முடிவில் இந்தியா- சீனா அணிகள் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

2023-09-19 12:21 GMT

சீனாவுக்கு எதிராக முதல் கோலை இந்தியா பதிவு செய்தது. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

2023-09-19 12:13 GMT

கம்போடியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் இந்திய அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டையும் கைப்பற்றியது.

2023-09-19 12:00 GMT

இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் சீனா ஒரு கோலை பதிவு செய்தது.

2023-09-19 11:58 GMT

இந்திய அணியின் கால்பந்து வீரர்கள்:

கோல்கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சாந்து, குர்மீத் சிங், தீரஜ் சிங் மோராங்தெம்.

டிஃபன்டர்கள்: சந்தேஷ் ஜிங்கன், அன்வர் அலி, நரேந்தர் கெலாட், லால்சங்நுங்கா, ஆகாஷ் மிஷ்ரா, ரோஷன் சிங், ஆசிஷ் ராய்,

மிட்ஃபீல்டர்கள்: ஜீக்சன் சிங் தவுனஜாம், சுரேஷ் சிங் வாங்ஜாம், அபுயா ரால்டே, அமர்ஜித் சிங் கியாம், கே.பி.ராகுல், நரேம் மகேஷ் சிங்.

ஃபார்வர்ட்: சிவசக்தி நாராயணன், ரஹிம் அலி, சுனில் சேத்ரி, அனிக்கெட் ஜாதவ், விக்ரம் பர்தாப் சிங், ரோஹித் தானு.

2023-09-19 11:58 GMT

ஆடவருக்கான கால்பந்து போட்டி தொடங்கியது. கால்பந்து போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 21 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் 4 சிறந்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை சந்திக்கிறது. 

Tags:    

Similar News