விளையாட்டு
நடால் மற்றும் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன்: உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சுடன் மோதவுள்ள நடால்

Published On 2022-05-30 11:07 IST   |   Update On 2022-05-30 11:48:00 IST
இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.
பாரிஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.

இதில் ஒரு போட்டியில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை  வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர்- அலியாசிம்மை, ஸ்பெயின் வீரர் நடால் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 3-6, 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் ஃபெலிக்ஸ் ஆகரை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதன்மூலம் காலிறுதி போட்டியில் ஜோகோவிச்சை, நடால் எதிர்கொள்கிறார்.

இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.

ஏற்கனவே 13 முறை பிரெஞ்ச் ஓபன் தொடரை வென்ற நடால், ஜோகோவிச்சை எதிர்கொள்ளும்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News