விளையாட்டு
பெங்களூரு, ராஜஸ்தான் அணியினர்

ஐபிஎல் 2வது தகுதிச்சுற்று - டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

Update: 2022-05-27 13:41 GMT
இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும்.
அகமதாபாத்:

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் ராஜஸ்தானை தோற்கடித்து குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் லக்னோவை பெங்களூரு அணி தோற்கடித்தது.
 
இந்நிலையில், இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், டு பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்குகிறது.
Tags:    

Similar News