விளையாட்டு
ஆட்ட நாயகன் டேனியல் சாம்ஸ்

ஐபிஎல் 2022 - தான் வெளியேறிய கையோடு சென்னையையும் வெளியேற்றியது மும்பை

Update: 2022-05-13 08:23 GMT
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மும்பை: 

ஐபிஎல் 15-வது சீசனின் லீக் ஆட்டங்கள் மும்பையில் நடைபெற்று வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

மும்பை அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 3ல் மட்டும் வென்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளதால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது.

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், நேற்று சென்னை அணியை தோற்கடித்து அந்த அணியையும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தடுத்துள்ளது.  
Tags:    

Similar News