விளையாட்டு
கே.எல். ராகுல், அத்தியா செட்டி, சுனில் செட்டி

கே.எல் ராகுல் திருமணம் எப்போது? - மனம் திறந்த காதலியின் தந்தை

Update: 2022-05-12 10:35 GMT
கே.எல்.ராகுல், அத்தியா செட்டி இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.
மும்பை:

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், நடிகர் சுனில் செட்டியின் மகள் அத்தியா செட்டியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. அந்த செய்தி உண்மையில்லை என அத்தியா செட்டி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கே.எல்.ராகுல், அத்தியா செட்டி திருமணம் எப்போது என அத்தியாவின் தந்தை நடிகர் சுனில் செட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு கே.எல் ராகுல் என்றால் விருப்பம். என் மகள் எப்படி இருந்தாலும் ஒரு நேரத்தில் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்.  ஆனால் விரைவாக திருமணம் நடைபெற்றால் நல்லது. ஆனால் அது அவர்களுடைய விருப்பம். எனக்கு அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் கவலை இல்லை. என்னுடைய ஆசிர்வாதம் அவர்களுடன் எப்போதுமே இருக்கும்.

இவ்வாறு சுனில் செட்டி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News