விளையாட்டு
டேவிட் வார்னர்

டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் - டேவிட் வார்னர் புதிய சாதனை

Published On 2022-05-06 02:32 IST   |   Update On 2022-05-06 02:32:00 IST
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்செய்த டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

அடுத்து ஆடிய ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார். மார்கிராம் 25 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் 89-வது அரை சதம் கடந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 88 அரை சதம், விராட் கோலி 77 அரை சதம் அடித்துள்ளனர்.

Similar News