விளையாட்டு
ஜோஃப்ரா ஆர்ச்சர்

காயத்திற்கு பின் கிரிக்கெட் விளையாடவே முடியாது என அஞ்சினேன் - ஜோஃப்ரா ஆர்ச்சர்

Published On 2022-05-05 12:27 GMT   |   Update On 2022-05-05 12:27 GMT
இதனால் தான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கிறார்.

இதனால் தான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோப்ரா ஆர்சர் கூறியதாவது:-

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு முதல் அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன்பின் கிரிக்கெட் விளையாடலாம் என நம்பிக்கையாக நான் போட்டியில் பங்கேற்றேன். ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என நான் பந்துவீசும் போது தான் தெரிந்தது. உடனே போட்டியில் இருந்து வெளியேறினேன். அதன்பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை கடந்த டிசம்பரில் நடந்தது.

5 மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். இப்போது தான் குணமடைந்து வருகிறேன். ஒரு கட்டத்தில் நான் கிரிக்கெட் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எனது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது என அஞ்சினேன். ஆனால் இப்போது எனக்கு எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை வருகிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விரைவில் கிரிக்கெட்டில் பங்கேற்பேன்.

இவ்வாறு ஜோஃப்ரி ஆர்ச்சர் கூறினார்.
Tags:    

Similar News