விளையாட்டு
விராட் கோலி குடும்பம், டேவிட் வார்னர் குடும்பம்

இன்னும் 2 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்- விராட் கோலிக்கு டேவிட் வார்னர் அறிவுரை

Update: 2022-05-05 05:42 GMT
விராட் கோலி மீண்டும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன அறிவுரை கூறுவீர்கள் என டெல்லி அணி வீரர் டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்டது.
மும்பை:

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 
முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். 

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே விராட் கோலி அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். சமீபத்தில் விளையாடிய சர்வதேச போட்டிகளிலும் விராட் கோலி சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வருகிறது. அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துகொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி மீண்டும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன அறிவுரை கூறுவீர்கள் என டெல்லி அணி வீரர் டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வார்னர்,  ‘விராட் கோலிக்கு ஒன்று தான் சொல்ல விரும்புகிறேன். "ஃபார்ம்" என்பது தற்காலிகமானது. "கிளாஸ்" என்பது தான் நிரந்தரம். எனவே அதை நீங்கள் தவற விடாதீர்கள். உங்களுக்கு இப்போது நடப்பது அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான். இன்னும் 2 குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மேலும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்’ என கூறினார்.
Tags:    

Similar News