விளையாட்டு
பிரியா மோகன், டூட்டி சந்த், புளோரன்ஸ் பர்லா

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் பிரியா மோகன்

Published On 2022-05-03 03:54 IST   |   Update On 2022-05-03 03:54:00 IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற, டூட்டி சந்த்திற்கு இந்த போட்டியில் 2வது இடமே கிடைத்தது.
பெங்களூரு:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் , ஒலிம்பிக் வீராங்கனை டூட்டி சந்தை,  பின்னுக்கு தள்ளிய இளம் வீராங்கனை பிரியா மோகன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்

200 மீட்டம் ஓட்டம் இறுதி ஆட்டத்தில் பிரியா மோகன் 23.90 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.  24.02 வினாடிகளில் பின்தங்கிய டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

ராஞ்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புளோரன்ஸ் பர்லா 24.13 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இது சிறந்த தொடக்கம் என்றும், தங்க பதக்கம் வென்றது சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற உதவும் என்றும், பிரியா மோகன் தெரிவித்தார். 

Similar News