விளையாட்டு
எம்.எஸ்.டோனி

கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலக இதுதான் காரணம் - எம்.எஸ்.டோனி விளக்கம்

Published On 2022-05-02 03:21 GMT   |   Update On 2022-05-02 03:21 GMT
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.
புனே:

ஐதராபாத் அணியுடனான வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேசியதாவது:

பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி எங்களுக்கு நல்ல இலக்கை வெற்றிக்கரமாக பந்துவீச வழங்கினர். ஆனால் நாங்கள் முதல் 2 ஓவரிலே 25 ரன்கள் விட்டு கொடுத்தோம். இதனால் வித்தியாசமான முறையில் பந்துவீசும் சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தள்ளப்பட்டனர்.

ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் சென்றாலும் கவலைப்படாதீர்கள், எஞ்சிய 2 பந்தை வைத்து எதையாவது செய்யுங்கள் என எப்போதும் நான் சொல்வேன். என்னுடைய இந்த கருத்தை மற்றவர்கள் ஏற்பார்களா என தெரியாது. எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் 7வது ஓவரிலிருந்து 14வது ஓவர் வரை கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.

கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு அவர் தான் இந்த சீசனில் கேப்டனாக செயல்படப் போகிறார் என தெரியும். முதல் 2 போட்டியில் ஜடேஜாவின் கேப்டன் பொறுப்பை நான்தான் கவனித்தேன். அதன்பிறகு ஜடேஜாவிடம் நீ தான் முடிவுகளை அணிக்காக எடுக்க வேண்டும் என்று கூறினேன்.

கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களில் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன்ஷிப்பின் அழுத்தம் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சை பாதிக்க செய்தது. அவரது மனதும் சோர்வடைந்தது. இதனால் தான் ஜடேஜா விலகினார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News