விளையாட்டு
சஞ்சு சாம்சன், ரோகித் சர்மா

ஐபிஎல் - ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை பவுலிங் தேர்வு

Published On 2022-04-30 19:07 IST   |   Update On 2022-04-30 19:07:00 IST
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மும்பை:

15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் அணி கடந்த போட்டியில் ஆடிய வீரர்களுடன் முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி தான் ஆடிய 8 போட்டிகளில் அனைத்திலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

Similar News