விளையாட்டு
பி.வி.சிந்து, பிரனோய்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து, பிரனோய் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2022-03-25 15:17 GMT   |   Update On 2022-03-25 15:17 GMT
மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-10, 21-19 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.
பாசல்:

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனோய் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-10, 21-19 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார்.

ஆடவர் பிரிவில் பிரனோய், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பருபள்ளி காஷ்யப்பை 21-16, 21-16 என்ற நேர்செட்களில் வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார்.

முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து அடுத்து நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில், தாய்லாந்தின் சுபநிதா கேட்டோங்கை எதிர்கொள்கிறார். 
Tags:    

Similar News