விளையாட்டு
இலக்கை கடந்த மகிழ்ச்சியில் நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக்.

குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது நார்வே

Published On 2022-02-06 04:03 GMT   |   Update On 2022-02-06 04:03 GMT
15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.
பீஜிங்:

24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடக்கும் இந்த போட்டியில் முதலாவது தங்கப்பதக்தக்தை நார்வே தட்டிச் சென்றது. பெண்களுக்கான 15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் (காலில் சக்கர பலகை கட்டிக்கொண்டு ஐஸ்கட்டி பாதையில் சறுக்கியும், கம்பு ஊன்றியும் ஓடுவது) நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். 

ரஷிய வீராங்கனை நதாலியா நேப்ரியேவா வெள்ளிப்பதக்கம் பெற்றார். 33 வயதான ஜோஹாக் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 1½ ஆண்டு கால தடை காரணமாக 2018-ம்ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News