செய்திகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணியில் ரஷித் சேர்ப்பு
கொரோனா காரணமாக பல வீரர்கள் விலகிய நிலையில், பஞ்சாப் அணி இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷித்தை ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது.
சில அணிகள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இப்போட்டி தொடரில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
பஞ்சாப் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சட்சன்னுக்கு பதிலாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷித் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியா வின் மெரிடித்துக்குப் பதில் அந்த நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீஸ் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கொல்கத்தா அணியில் கம்மின்ஸ்சுக்கு (ஆஸ்திரேலியா) பதிலாக டிம் சவுதி (நியூசிலாந்து) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.