இந்திய ஓபன் பேட்மிண்டன்: தென்கொரிய வீராங்கனை அன் சே-யங் சாம்பியன்
- அன் சே-யங் ஏற்கனவே 2023 மற்றும் 2025-ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- தற்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜியி- தென்கொரியாவின் அன் சே-யங் உடன் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் தென்கொரிய வீராங்கனையின் ஆட்டத்திற்கு வாங் ஜியி-யால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அன் சே-யங் 21-13, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் ஏற்கனவே 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மொத்தம் 3 முறை டெல்லி ஓபனை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தைவானைச் சேர்ந்த லின் சுன்-யி இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் லின் 21-10, 21-18 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.