டென்னிஸ்
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம்: முதல் சுற்றோடு வெளியேறினார் வீனஸ் வில்லியஸ்
- டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார்.
- ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை இழந்து தோல்வியடைந்தார்.
2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு மூலம் முதன்மை சுற்றில் விளையாடிய அனுமதி பெற்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் ஒல்கா டானிலோவிச்சை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் இருவரும் மல்லுக்கட்டினர். இதனால் முதல் செட்டை டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் 7(7)-6(5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றார். ஆனால், இதே உத்வேகத்துடன் 2-வது மற்றும் 3-வது செட்டில் அவரால் விளையாட முடியவில்லை.
2-வது செட்டை 3-6 என இழந்த நிலையில், 3-வது செட்டை 4-6 இழந்து தோல்வியடைந்தார். இதனால் முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறியுள்ளார்.