ஆக்கி இந்தியா 'லீக்': தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா?- கலிங்கா லான்சர்சுடன் இன்று மோதல்
- முதல் கட்ட ஆட்டங்கள் சென்னையிலும்,2-வது கட்ட போட்டிகள் ராஞ்சியிலும் நடைபெற்றது.
- 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஆக்கி இந்தியா லீக்கின் 3-வது மற்றும் இறுதிகட்ட போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று தொடங்கியது.
முதல் கட்ட ஆட்டங்கள் சென்னையிலும்,2-வது கட்ட போட்டிகள் ராஞ்சியிலும் நடைபெற்றது.
சென்னையை மையமாக கொண்ட அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி யுடன் 7 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
முதல் போட்டியில் ஐதராபாத் டூபான்சையும், 2-வது ஆட்டத்தில் சூர்மா ஆக்கி கிளப்பையும், 3-வது போட்டியில் எஸ்.ஜி. பைபர்சையும் வீழ்த்தி இருந்தது. ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு எச்.ஐ.எல்.ஜி.சி, பெங்கால் டைகர்ஸ் அணிகளிடம் தொடர்ச்சியாக வீழ்ந்தது.
அமித் ரோகித் தாஸ் தலைமையிலான தமிழ்நாடு டிராகன்ஸ் 6-வது ஆட்டத்தில் கலிங்கா லான்சர்சை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.
தமிழ்நாடு டிராகன்ஸ் அணி கலிங்கா லான்சர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இதனால் தமிழ்நாடு டிராகன்ஸ் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். டிராகன்ஸ் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் லான்செர்ஸ் அணியை வீழ்த்துவது சவாலானது.
அந்த அணி 5 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. லான்செர்ஸ் இதுவரை தோல்வியை தழுவவில்லை.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால் டைகர்ஸ்-எஸ்.ஜி.பைபர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்கால் அணி 6 புள்ளியுடன் 6-வது இடத்திலும், பைபர்ஸ் 4 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.