செய்திகள்
இளையோர் உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை: இந்திய ஆண்கள் மற்றும் கலப்பு அணிக்கு தங்கம்
இளையோர் உலக சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் கலப்பு அணிகள் தங்கம் வென்றன.
போலந்து நாட்டில் இளையோர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்ஸ் வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் அமெரிக்காவை 233-231 என வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.
அதேபோல் பெண்கள் அணி துருக்கியை 228-216 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.
அதனைத் தொடர்ந்து கலப்பு அணியும் தங்கம் வென்று அசத்தியது.