செய்திகள்
மணிகா பத்ரா

டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா தோல்வி

Published On 2021-07-26 14:02 IST   |   Update On 2021-07-26 16:16:00 IST
முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா, 3-வது சுற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோல்வியடைந்தார்.
டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்கள் என்ற பெருமையுடன், ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுகிறார் மணிகா பத்ரா.

டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஆஸ்திரியாவின் சோபியா பொல்கானோவாவை எதிர்கொண்டார். முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா, இந்த சுற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இதனால் 8-11, 2-11, 5-11, 7-11 என தொடர்ந்து நான்கு கேம்களை இழந்து தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.

Similar News