சினிமா செய்திகள்

நான் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்த திரைப்படம் "பராசக்தி"- கவிஞர் வைரமுத்து

Published On 2026-01-16 15:30 IST   |   Update On 2026-01-16 15:30:00 IST
பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.

சென்னையில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா என செய்தியாளர்கள் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வைரமுத்து கூறியதாவது:-

பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன்..ஆம், 1952ம் ஆண்டில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன். முன்பே பார்த்து நான் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்த திரைப்படம்.

நடிகர் திலகம் என்கிற மாபெரும் கலைஞனும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வசனகர்த்தாவும் தமிழ்நாட்டிற்கு கொடுத்த குடை என்று சொல்லவேண்டும்.

பராசக்தி 52-ல் வெளிவந்தது.. 53-ல் நான் பிறக்கிறேன். நான் வளர வளர பராசக்தி படித்து, கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.

தற்போது வந்துள்ள பராசக்தி படத்தை நான் பார்க்கவில்லை. படம் பார்க்காமல் நான் கருத்து சொல்லக் கூடாது. முகர்ந்து பார்க்காமல் வாசனை சொல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News