சினிமா செய்திகள்

மார்ச் 13-ல் வெளியாகிறது 'கொலைச்சேவல்'

Published On 2026-03-04 13:27 IST   |   Update On 2026-03-04 13:27:00 IST
  • பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
  • இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர். பி. பாலா தயாரிக்கும் படம், 'கொலைச்சேவல்'. அறிமுக இயக்குநர் வி. ஆர். துதிவாணன் இயக்கும் இப்படத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.

'கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு படம் திரையரங்குகளில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, 'கொலைச்சேவல்' படம் வருகிற 13-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீடு தொடர்பான போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



Tags:    

Similar News