ரஜினி சார் Magician - ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த சுராஜ்
இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் "ஜெயிலர் 2." இந்திய திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் சுராஜ் கொடுத்துள்ளார்.
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள "யூத்" திரைப்படத்தில் சுராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ், "ஜெயிலர் 2 திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது. இந்தப் படம் ஜெயிலர் படத்தை விட சிறப்பாக இருக்கும்.
எனக்கு நீண்ட காலமாக ரஜினி சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றவே வாய்ப்பு கிடைத்து. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினி சார் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒரு வித்தைக்காரர்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனுஷ் சார் ஸ்டார் நடிகர். அவர் ஒருபக்கம் கமர்ஷியல் திரைப்படங்களும், மறுபக்கம் மரியான் மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்களிலும் நடிக்கிறார். அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார்," என்றார்.