இந்தியா

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் துன்புறுத்தப்படும் புலம்தொழிலாளர்கள் : மம்தா குற்றச்சாட்டு

Published On 2026-01-16 15:15 IST   |   Update On 2026-01-16 15:32:00 IST
  • மேற்கு வங்கத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மீது தாக்குதல்.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

பாஜக ஆளும் மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பெங்காலி பேசுவதற்காக சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வடக்கு பெங்காலில் நிர்வாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 மேங்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடுகிறது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் உள்ள டெல்டங்கா இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மைனாரிட்டி சமூகத்தின் இந்த கோபம் நியாமானது.

மேற்கு வங்கத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் துன்புறுத்தப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுடைய குடும்பத்துடன் நிற்கிறோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

வெளிமாநிலத்தில் பெங்கால் மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதனால் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Tags:    

Similar News