செய்திகள்
பவானி தேவி

வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி

Published On 2021-07-26 06:13 IST   |   Update On 2021-07-26 13:20:00 IST
டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி துனிசிய வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ:

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது.

இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர்.

இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Similar News