செய்திகள்
சூர்யகுமார் யாதவ்

அசத்திய சூர்யகுமார் -இலங்கைக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2021-07-25 16:28 GMT   |   Update On 2021-07-25 16:28 GMT
இலங்கை தரப்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
கொழும்பு:

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்கள்.

துவக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா, சமீரா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் ஷிகர் தவானுடன் சஞ்சு சாம்சன் இணைந்து கவனமாக ஆடினர். சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  

கேப்டன் ஷிகர் தவான் 36 பந்துகளை சந்தித்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார்.  சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்கள் விளாசினார்.

ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 20 ரன்களுடனும், குருணால் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளும், சமிகா குணரத்னே ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
Tags:    

Similar News