செய்திகள்
கோப்புபடம்

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா

Published On 2021-07-17 09:46 GMT   |   Update On 2021-07-17 09:46 GMT
ஜூடோ வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் ஒன்றின் ஊழியர்கள் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. போட்டி தொடங்க இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  



டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி செய்தி தொடர்பாளர் மசாத்  தகாயா தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்பட்டவரின் பெயர், விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. போட்டி நடைபெறுவதில் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. 

ஏற்கனவே ஜூடோ வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் ஒன்றின் ஊழியர்கள் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த அச்சம் காரணமாக முன்னணி டென்னிஸ் வீரர்கள் நடால் பெடரர் ஆகியோர் விலகி உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
Tags:    

Similar News