செய்திகள்
ஆடம் ஜம்பா - கேன் ரிச்சர்டுசன்

ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்.சி.பி வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்டுசன் திடீர் விலகல்

Published On 2021-04-26 11:33 IST   |   Update On 2021-04-26 11:33:00 IST
ஐபிஎல் தொடரில் இருந்து முன்னணி வீரர்களின் அடுத்தடுத்த விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல்  தொடரில் இருந்து விலகுவதாக இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். அண்மையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆண்ட்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். 

ஐபிஎல் தொடரில் இருந்து முன்னணி வீரர்களின் அடுத்தடுத்த விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

Similar News