செய்திகள்
பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் மிதாலி ராஜ், பிவி சிந்துவை பாராட்டிய பிரதமர் மோடி

Published On 2021-03-28 21:30 GMT   |   Update On 2021-03-28 21:30 GMT
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசி வருகிறார்.
புதுடெல்லி:

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச அளவில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நீண்ட வருடங்களாக அவரின் உழைப்பும், வாழ்வும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண் கிரிக்கெட்டர்களுக்கும் ஓர் உதாரணம்.

நாம் மகளிர் தினத்தை கொண்டாடும் இந்த மார்ச் மாதத்தில் பல வீராங்கனைகள் பதக்கங்களை வென்றும், சாதனைகள் படைத்தும் வருகின்றனர். டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தங்கப்பதக்கப் பட்டியலிலும் இந்தியா உச்சத்தில் உள்ளது. இதில் ஆண்களும், பெண்களும் சிறப்பாக ஆடினர். பி.வி.சிந்துவும் சுவிஸ் ஓபன் சூப்பர் 300 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என பாராட்டினார்.
Tags:    

Similar News