செய்திகள்
பாபர் அசாம்

ராவல்பிண்டி டெஸ்ட்: பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 145/3

Published On 2021-02-04 13:51 GMT   |   Update On 2021-02-04 13:51 GMT
ராவல்பிண்டியில் இன்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் இம்ரான் பட், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இம்ரான் பட் 15 ரன்னிலும், அபித் அலி 6 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த அசார் அலி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதனால் பாகிஸ்தான் 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் அசாம் உடன் ஃபவாத் அலாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அலாம் அரைசதத்தை நெருங்கினார். மதிய தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பாபர் அசாம் 77 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News