செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 430 ரன்கள் குவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சதம் விளாச, வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்துள்ளது.
வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்திருந்தது ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், லித்தோன் தாஸ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லித்தோஸ் தாஸ் 38 ரன்னில் வெளியேறினார். ஷாகிப் 68 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 168 பந்தில் சதம் 103 ரன்கள் விளாசி வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜோமெல் வாரிகன் 4 விக்கெட் வீழ்த்தினார்.