செய்திகள்
சேப்பாக்கம் மைதானம் (கோப்புப்படம்)

சேப்பாக்கம் 2-வது டெஸ்ட்: 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி

Published On 2021-02-01 15:22 IST   |   Update On 2021-02-01 15:22:00 IST
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின்போது 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் வருகிற 13-ந்தேதியும் தொடங்குகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. பூட்டிய மைதானத்திற்குள் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறவித்தது. இதற்கிடையில் பிப்ரவரி 1-ந்தேதியில் (இன்று) இருந்து 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதனால் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் 2-வது டெஸ்டில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் என தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்டில் கிளப் உறுப்பினர்கள், மீடியா நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.

Similar News