செய்திகள்
ஜெய் ஷா

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமனம்

Published On 2021-01-31 16:01 IST   |   Update On 2021-01-31 16:01:00 IST
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் பிசிசிஐ பொருளாளர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். உங்களுடைய தலைமையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உச்சத்தை அடையும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆசிய கிரிக்கெட் வீரர்கள் நன்மை அடைவார்கள். பதவியில் வெற்றிகரமாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்’’ என்றார்.

Similar News