செய்திகள்
மழையால் ஆட்டம் பாதிப்பு

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி: 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4/0 - மழையால் ஆட்டம் பாதிப்பு

Published On 2021-01-18 08:52 GMT   |   Update On 2021-01-18 08:52 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
பிரிஸ்பேன்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன் எடுத்தது. ஷர்துல் தாகூர் 67 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னும் எடுத்தனர். ஹாசல்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

33 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 54 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக வார்னர் 48 ஹரிஸ் 38, ஸ்மித் 55 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிராஜ் 5 விக்கெடும் தாகூர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 327 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சிறுது நேரத்தில் மழை பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது.

4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னும் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

Tags:    

Similar News