செய்திகள்
விராட் கோலி, அனுஷ்கா சர்மா

ஆஸி. தொடர்: இரண்டு டெஸ்ட் போட்டிகளை விராட் கோலி மிஸ் செய்ய வாய்ப்பு

Published On 2020-11-08 20:52 IST   |   Update On 2020-11-08 20:52:00 IST
அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 15-ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ குழந்தை பிறக்க இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3,4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருக்க விராட் கோலி பிசிசிஐ-யிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘‘இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021-ல் குழந்தை பிறக்கப்போகிறது’’ என குறிப்பிட்டிருந்தார்.

Similar News