செய்திகள்
ஜோகோவிச்

பெண் லைன் அம்பயர் மீது பந்து தாக்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்டுக்கொண்ட ஜோகோவிச்

Published On 2020-09-07 14:00 GMT   |   Update On 2020-09-07 14:00 GMT
பெண் லைன் அம்பயர் கழுத்தில் பந்து பட்டு காயம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு ஜோகோவிச் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்தித்தார்.

ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது. 5-6 என பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் பின்னோக்கி வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த பெண் லைன் அம்பயர் கழுத்தில் பட்டு அவர் காயமடைந்தார். இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார்.

ஆனாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு இழந்தார்.

நடந்த சம்பவம் குறித்து ஜோகோவிச் கூறுகையில் ‘‘இந்த மொத்த சூழ்நிலையும் என்னை கவலையாகவும், காலியாவும் வைத்து விட்டது. நான் லைன் அம்பயரை பரிசோதித்தேன். அவர் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன் என்று சொன்னதால் கடவுளுக்கு நன்றி.

அவருக்கு இதுபோன்ற மன அழுத்தத்தை கொடுத்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இது திட்டமிடாதது. இருந்தாலும் தவறு. அவருடைய தனியுரிமைக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பெயரை நான் வெளியிடவில்லை.

இந்த தகுதி நீக்கத்தில் இருந்து, என்னுடைய ஏமாற்றத்தின் மீது கவனம் செலுத்தி, பாடம் கற்றுக்கொண்டு சிறந்த வீரராகவும், சிறந்த மனிதராகவும் வளர வேண்டியது அவசியம்.

அமெரிக்க ஓபன் தொடர் ஏற்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் எனக்கு மிப்பெரிய அளவில் ஆதரவாக இருக்கும் என்னுடைய அணிக்கும், குடும்பத்திற்கும், எப்போதும் என்னுடன் இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ’’ என்றார்.
Tags:    

Similar News