செய்திகள்
காயமடைந்த நடுவர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - முதல்நிலை வீரரான ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்

Published On 2020-09-07 01:48 GMT   |   Update On 2020-09-07 01:48 GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்தித்தார்.

ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார். இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார். 

ஆனாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா காலிறுதிக்கு முன்னேறினார். 
Tags:    

Similar News