செய்திகள்
டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-06 17:37 GMT   |   Update On 2020-09-06 17:37 GMT
ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியிட்டுள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே அணியில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி நடக்குமா? என்ற அச்சம் கூட எழுந்தது. ஆனால் மற்ற நபர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இன்று போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘‘கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடு துணை பிசியோதெரபிஸ்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் இரண்டு சோதனையின்போது நெட்டிவ் முடிவு வந்தது. 3-வது சோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது’’ என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News