செய்திகள்
விராட் கோலி

கோலியை எங்கே என்று கேட்பவர்கள் அங்கே செல்லலாம்: ஆர்சிபி

Published On 2020-08-21 16:56 GMT   |   Update On 2020-08-21 16:56 GMT
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புறப்படும்போது விராட் கோலியை காணவில்லையே என்று கேட்பவர்கள் துபாய் செல்லலாம் என ஆர்சிபி தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். 13-வது போட்டித் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனி விமானம் மூலம் துபாய் புறப்படடது. விமானத்தில்  வீரர்கள் உள்ளது போன்ற படத்தில் விராட் கோலி இல்லை.

இதுகுறித்து ரசிகர்கள் விராட் கோலியை எங்கே? எனக் கேள்விகள் எழுப்பினார். இந்நிலையில் ஒரு வீட்டின் மாடியில் நின்றபடி எடுத்த படத்தை விராட் கோலி பதிவிட்டு ஹாய் துபாய் என டுவீட் செய்திருந்தார்.

இந்த படத்தை வெளியிட்ட ஆர்சிபி, விராட் கோலியை எங்கே என கேட்பவர்கள், அங்கே செல்லலாம். கேப்டன் கோலி வீட்டில் உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற சோதனை முடிவை பெற்றபின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த வாரம் சாஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் பெங்களூருவுக்கு சென்றபோது கோலி செல்லவில்லை. அவர்களை அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்திய பிறகு துபாயிக்கு பறந்துள்ளனர்.
Tags:    

Similar News