செய்திகள்
வைஷாலி விஸ்வேஸ்வரன் - விஜய் சங்கர்

ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் நிச்சயதார்த்தம்- கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து

Published On 2020-08-21 13:12 IST   |   Update On 2020-08-21 13:12:00 IST
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
சென்னை:

2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றவர் விஜய் சங்கர். தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஜய் சங்கருக்கு கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், ஸ்ரேயாஸ் ஐயர், அபினவ் முகுந்த் மற்றும் ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட்  வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் 2020 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடவுள்ளார்.



Similar News