செய்திகள்
வெற்றி பெற்ற செயின்ட் லூசியா அணி

கரீபியன் பிரிமீயர் லீக் - பார்படாசை வீழ்த்தி செயின்ட் லூசியா அணி முதல் வெற்றி

Published On 2020-08-21 04:33 IST   |   Update On 2020-08-21 04:33:00 IST
கரீபியன் பிரிமீயர் லீக்கில் பார்படாஸ் டிரைடன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது செயின்ட் லூசியா சாக்ஸ் அணி.
கரீபியன் பிரிமீயர் லீக்கின் 5வது ஆட்டம் டிரினிடாடில் நேற்று நடந்தது. செயின்ட் லூசியா சாக்ஸ் - பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பார்படாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் 35 ரன்னிலும், கேப்டன் ஹோல்டர் 27 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. பார்படாஸ் அணி 18.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி செயின்ட் லூசியா அணி 5 ஓவரில் 47 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 4.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Similar News