செய்திகள்
எம்எஸ் டோனி

கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பது பாராட்டுதான்- எம்எஸ் டோனி

Published On 2020-08-21 00:34 IST   |   Update On 2020-08-21 00:34:00 IST
கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான். என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என எம்.எஸ்.டோனி தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கடந்த 15-ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

டோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து அவரது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரைபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். டோனியின் சாதனைகளை பல்வேறு தரப்பினரும் புகழ்ந்தவண்ணம் உள்ளனர்.
 
இதற்கிடையே, இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளார் என டோனிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கலைஞர்கள், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் விரும்புவது உழைப்புக்கான அங்கீகரிப்பு  மட்டும்தான் என்று கூறியுள்ள டோனி, தன்னை அங்கீகரித்து பாராட்டியதற்கு பிரதமருக்கு நன்றி என டோனி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  

Similar News