செய்திகள்
மஹிம் வர்மா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவர் ராஜினாமா

Published On 2020-04-14 11:00 IST   |   Update On 2020-04-14 11:00:00 IST
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மஹிம் வர்மா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளார். துணைத் தலைவராக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து மஹிம் வர்மா கூறுகையில் ‘‘தற்போது சீராக சென்று கொண்டிருக்காத எனது மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. இதனால் என்னுடைய ராஜினாமா கடிதத்தை சிஇஓ ராகுல் ஜோரிக்கு அனுப்பியுள்ளேன். என்னுடைய ராஜினாமா ஏற்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

நான் ஏற்கனவே இதுகுறித்து செயலாளர் ஜெய் ஷாவிடம் பேசிவிட்டேன். நான் தற்போது உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு செல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும். இதனால்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன்’’ என்றார்.

Similar News