செய்திகள்
குயிண்டான் டி காக்

கேப்டன் மற்றும் பேட்டிங் ஆகியவற்றுக்கு கீப்பிங் உதவியாக இருக்கிறது: குயிண்டான் டி கான்

Published On 2020-02-04 09:50 GMT   |   Update On 2020-02-04 11:39 GMT
கேப்டன் பதவி சுமையில்லை, பேட்டிங் மற்றும் அணியை வழிநடத்துவதற்கு கிப்பிங் உதவியாக இருக்கிறது என் குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டான் டி காக். தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வரும் டி காக், பேட்டிங்கில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகியவற்றுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்பது அவருக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் விக்கெட் கீப்பர் பணி எனது கேப்டன் பதவிக்கும், பேட்டிங்கிக்கும் உதவுகிறது என்று குயிண்டான் டி காக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குயிண்டான் டி காக் கூறுகையில் ‘‘விக்கெட் கீப்பராக பணியாற்றுவது என்னுடைய கேப்டன் பதவிக்கும்,  பேட்டிங்கிக்கும் உதவியாக இருக்கிறது. என்னால் எவ்வளவு முடியுமோ அதுவரை கீப்பராக பணியாற்றுவது எனக்கு முக்கியமானது.

எனக்கு ஏராளமான வேலைப்பளு என்று கூறுகிறார்கள். தற்போது வரை நான் சிறப்பாக இந்த வேலையை செய்து வருகிறேன். தற்போது கேப்டனாக பணியாற்றுவது சற்று கூடுதல் பொறுப்பாகும். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுடன் இந்த பணியை செய்ய இருக்கிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News