செய்திகள்

தலைவா, நீங்கள் வீசியது நோ-பால்: முன்னாள் அம்பயர் படத்தை அப்லோடு செய்து சச்சினுக்கு சுட்டிக்காட்டிய ஐசிசி

Published On 2019-05-12 12:44 GMT   |   Update On 2019-05-12 12:44 GMT
நெட்டில் சச்சின் தெண்டுல்கர் வீசிய பந்து நோ-பால் என்பதை முன்னாள் அம்பயர் படத்தை அப்லோடு செய்து ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ளது.
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் 46-வயதான சச்சின் தெண்டுல்கர், கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் அணியான மிடில்செக்ஸ் அணியுடன் இணைந்து தெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியை சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்காக தொடங்கியுள்ளார். இந்த அகாடமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சச்சின் தனது சிறுவயது நண்பரான வினோத் காம்ப்ளி உடன் டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு சென்றார். அங்கு அமைத்திருந்த பயிற்சிக்கான இடத்தில் (Net Session) சச்சின் தெண்டுல்கர் பந்து வீசினார். வினோத் காம்ப்ளி அதை எதிர்கொண்டார்.

இந்த வீடியோவை சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்லோடு செய்திருந்தார். அந்த வீடியோவில் சச்சின் க்ரீஸ்க்கு வெளியே வந்து பந்து வீசியது தெரிந்தது.

இதை சுட்டுக்காட்டி ஐசிசி, முன்னாள் அம்பயரான ஸ்டீவ் பக்னர் படத்தை அப்லோடு செய்து, நீங்கள் வீசியது நோ-பால் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News