செய்திகள்

இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா ஏ 282/3- கேஎல் ராகுல் 81 ரன்னில் அவுட்

Published On 2019-02-13 13:31 GMT   |   Update On 2019-02-13 13:31 GMT
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. #INDA
இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மைசூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி கேஎல் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

கேஎல் ராகுல் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே முதல் டெஸ்டில் 89 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது 2-வது முறையாக சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அபிமன்யூ ஈஸ்வரன் சதமடித்து 117 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு பிரியங்க் பன்சால் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த பிரியங்க் பன்சால் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அத்துடன் இன்றைய முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா ‘ஏ’ 84.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 14 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
Tags:    

Similar News