செய்திகள்

குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசாததால் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளசிசுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை

Published On 2019-01-06 17:44 GMT   |   Update On 2019-01-06 17:44 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. #SAvPAK
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய, தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து, 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், கேப்டன் டு பிளசிசுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது, மேலும், டு பிளசிசுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்துள்ளது ஐசிசி. #SAvPAK
Tags:    

Similar News