செய்திகள்

யுவராஜ்சிங் மதிப்பு 94 சதவீதம் சரிவு - ரூ.1 கோடிக்கு தான் ஏலம் போனார்

Published On 2018-12-19 06:50 GMT   |   Update On 2018-12-19 09:19 GMT
இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் மதிப்பு 94 சதவீதம் சரிந்துள்ளது. #IPLAuction2019 #YuvrajSingh
ஜெய்ப்பூர்:

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது.

இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. எஞ்சியுள்ள வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.

இதற்கான ஏலப்பட்டியலில் மொத்தம் 356 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். 5 வீரர்கள் கடைசி நேரத்தில் பட்டியலில் இடம் பெற்றனர்.

இதில் 60 வீரர்கள் மட்டுமே ஏலம் போனார்கள் 8 அணிகளும் சேர்த்து இதற்காக மொத்தம் ரூ.106.80 கோடி செலவழித்தது.

இந்திய அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

அவருக்கான அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். முதல் சுற்றில் யுவராஜ்சிங்கை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் அவர் ஏலம் போகமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் 2-வது சுற்றில் அவரை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கே எடுத்துக்கொண்டது.

இதன்மூலம் யுவராஜ்சிங்கின் மதிப்பு 94 சதவீதம் சரிந்துள்ளது. அவர் 2015-ம் ஆண்டில் அதிகமாக ரூ.16 கோடிக்கு ஏலம் போனார். டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது. 2014-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.14 கோடிக்கு எடுத்து இருந்தது.

2016-ல் இருந்து அவருக்கான விலை சரிய தொடங்கியது. அந்த ஆண்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.7 கோடிக்கு வாங்கி இருந்தது. கடந்த ஆண்டு ரூ.2 கோடிக்கு (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) விலை போனார். தற்போது அவரது விலை ரூ.1 கோடியாக குறைந்துள்ளது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி கொடுத்து வேகப்பந்து வீரர் மொகித்சர்மாவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இதேபோல ருதுராஜ் கெய்க்வாட்டை ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்துக்கொண்டதால் 2 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது. #IPLAuction2019 #YuvrajSingh
Tags:    

Similar News